சாத்தூர், மே 31: சாத்தூர் அருகே புதிய நீர்த்தேக்க தொட்டியில் தண்ணீர் கசிந்து வருகிறது. சாத்தூர் அருகே மேட்டமலை கிராமத்தில் சுமார் 2 ஆயிரம் குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்களின் குடிநீர் தேவைக்காக ஆழ்துளை கிணற்றுடன் மேல் நிலை நீர்தேக்கத் தொட்டி கட்டி கொடுக்கப்பட்டது. 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட இந்த தொட்டி 15வது நிதிக்குழு மானிய நிதியில் ரூ.18 லட்சத்தில் கட்டப்பட்டது.
கட்டப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டு வந்த சில மாதங்களில் தொட்டியில் விரிசல் ஏற்பட்டு பல இடங்களில் தண்ணீர் கசிந்து ஒழுகி வருகிறது. எனவே தொட்டியை சீரமைக்க வேண்டும் என கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இது குறித்து பொதுமக்கள் கூறும்போது, தரமற்ற பணியால் மேல்நிலைத் தண்ணீர் தொட்டியில் தண்ணீர் கசிவு ஏற்பட்டு ஓழுகி வருகிறது. இதனை உடனடியாக சீரமைக்க வேண்டும் என தெரிவித்தனர்.
The post மேட்டமலை கிராமத்தில் தண்ணீர் கசியும் புதிய வாட்டர்டேங்க் சீரமைக்க மக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.