×

முருகன் கோயில் மண்டல பூஜை நிறைவு

கிருஷ்ணகிரி, ஏப்.23: கிருஷ்ணகிரி பழையபேட்டை அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில், கடந்த மாதம் திருச்செந்தூர் முருகன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. தொடர்ந்து தினமும் பூஜைகள் நடந்து வந்த நிலையில், நேற்று மண்டல பூஜை நிறைவு விழா நடந்தது. இதையொட்டி காலை 10.30 மணிக்கு, மூலவர் மற்றும் உற்சவர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்தது. தொடர்ந்து, கணபதி ஹோமம், விக்னேஸ்வர பூஜை, மகா பூர்ணாஹூதி உள்ளிட்டவை நடந்தது. பின்னர், முருகன் உற்சவருடன், பெண்கள் பால்குடங்களை எடுத்துக்கொண்டு மகாராஜகடை சாலை மற்றும் மலையப்ப சீனிவாசபெருமாள் கோயில் வரை சென்று, மீண்டும் கோயிலுக்கு வந்தனர். மூலவருக்கு பாலாபிஷேகம் செய்தனர். இதில் திரளான பக்தர்கள் அலகு குத்திக் கொண்டு வேண்டுதல் நிறைவேற்றினர். இதற்கான ஏற்பாடுகளை திருப்பணி குழுவினர், ஓம்சக்தி மன்றத்தினர் மற்றும் பருவத ராஜகுல ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

The post முருகன் கோயில் மண்டல பூஜை நிறைவு appeared first on Dinakaran.

Tags : Murugan Temple Mandala Pooja ,Krishnagiri ,Tiruchendur Murugan ,Angala Parameshwari Amman Temple ,Krishnagiri, Pazhayapettai ,Mandala Pooja Completion Ceremony ,Pooja ,
× RELATED பட்டன் ரோஸ் சாகுபடி செய்ய விவசாயிகள் தீவிரம்