காஞ்சிபுரம், மார்ச் 23: காஞ்சிபுரத்தில், தேர்தல் பாதுகாப்பு பணிக்கு முன்னாள் படை வீரர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதையொட்டி, முன்னாள் படை வீரர்களை தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்திட ஆணைகள் பெறப்பட்டுள்ளது. இப்பணிக்கு உரிய சிறப்பு ஊதியம் வழங்கப்படும்.
எனவே, உடல் தகுதியுள்ள 65 வயதுக்குட்பட்ட காஞ்சிபுரம் மாவட்டத்தை சார்ந்த முன்னாள் படைவீரர்கள், தாம்பரம் ரயில் நிலையத்தின் எதிரே உள்ள ஜீவா வணிக வளாகத்தில் அமைந்துள்ள காஞ்சிபுரம் மாவட்ட முன்னாள் படை வீரர் நல துணை இயக்குநர் அலுவலகத்தில் படை விலகல் சான்று மற்றும் அடையாள அட்டையுடன் தங்களது விருப்பத்தினை அவர்களது படை எண், தரம், பெயர், முகவரி, தொலைபேசி எண் ஆகிய விவரங்களுடன் எழுத்து மூலமாக நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ உடனடியாக பதிவு செய்து பயன்பெறலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
The post முன்னாள் படை வீரர்கள் தேர்தல் பாதுகாப்பு பணிக்கு விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.