×

முன்னாள் எம்எல்ஏ மறைவு; முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: தமிழ்நாடு முதல்வர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தி:
பெரும்புதூர் சட்டமன்ற தொகுதி முன்னாள் உறுப்பினர் ஏ.கோதண்டம் மறைவெய்திய செய்தியறிந்து மிகவும் வருந்தினேன். காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக முன்னோடியான கோதண்டம், திமுக தலைமைப் பொதுக்குழு உறுப்பினராக சிறப்பாக செயல்பட்டவர். 1989 மற்றும் 1996ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் திமுக சார்பில் போட்டியிட்டு, ஸ்ரீபெரும்புதூர் தொகுதி உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுத் திறம்பட மக்கள் பணி ஆற்றியவர்.

அவரை இழந்து வாடும் அவரது அன்பு மகன் குன்றத்தூர் நகரத் திமுக செயலாளரும் குன்றத்தூர் நகர்மன்றத் தலைவருமான கோ.சத்தியமூர்த்திக்கும், அவரது குடும்பத்தார்க்கும், காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக உடன்பிறப்புகளுக்கும், ஸ்ரீபெரும்புதூர் தொகுதி மக்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post முன்னாள் எம்எல்ஏ மறைவு; முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் appeared first on Dinakaran.

Tags : MLA ,Principal ,M.A. K. Stalin ,Chennai ,Tamil Nadu ,Dimuka Talawar ,STALIN ,Godandam ,Dimuka ,Kanchipuram Northern District ,General Committee of Dimuka Leadership ,Former ,M.O. K. Stalin ,Dinakaran ,
× RELATED ரூ.16 லட்சம் மதிப்பீட்டில் புதிய...