×

முத்துப்பேட்டை அருகே போதை புகையிலை கேட்டு 2 பேரை தாக்கியவர் கைது

முத்துப்பேட்டை, ஆக. 31: முத்துப்பேட்டை அருகே போதை புகையிலை கேட்டு 2 பேரை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். முத்துப்பேட்டை பழைய நம்மங்குறிச்சி சாலையில் ஒதியடிக்காடு கிராமத்தை சேர்ந்தவர் கோபால்ஜி (35). இவர் நம்மங்குறிச்சி கிராமத்தை சேர்ந்த பிரசாத் (32) ஆகியோர் ஒரு பைக்கில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அதே பகுதியை சேர்ந்த மாதேஷ் (25), பிரான்சிஸ் (24) ஆகியோர் தடை செய்யப்பட்ட போதை பொருள் இருக்கிறதா என்று கேட்டுள்ளனர். அதற்கு பழக்கம் இல்லை என்று கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், பைக்கில் வந்த கோபால்ஜி, பிரசாத் ஆகியோரை கடுமையாக தாக்கி விட்டு தப்பியுள்ளனர்.

இதுகுறித்து முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் கோபால்ஜி புகார் செய்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் மாதேஷை கைது செய்து திருத்துறைப்பூண்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைந்தனர். மேலும் மற்றொரு வாலிபரான பிரான்சிசை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

The post முத்துப்பேட்டை அருகே போதை புகையிலை கேட்டு 2 பேரை தாக்கியவர் கைது appeared first on Dinakaran.

Tags : Muthuppet ,Muthupet ,Muthupettai ,
× RELATED திருவாரூர் பழைய பஸ் நிலையத்தில்...