×

முதல் டி20 போட்டியில் இந்தியா – இங்கிலாந்து இன்று பலப்பரீட்சை: மோடி ஸ்டேடியத்தில் இரவு 7.00க்கு தொடக்கம்

அகமதாபாத்: இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டி20 போட்டி, அகமதாபாத் மோடி ஸ்டேடியத்தில் இன்று இரவு 7.00க்கு தொடங்குகிறது.இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, முதலில் விளையாடிய டெஸ்ட் தொடரில் 1-3 என்ற கணக்கில் படுதோல்வி அடைந்தது. அடுத்து 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. முதல் டி20 போட்டி அகமதாபாத்தில் இன்று நடக்கிறது.வரும் அக்டோபர் மாதம் ஐசிசி உலக கோப்பை டி20 தொடர் நடைபெற உள்ளதால், அதற்கான ஒத்திகையாக இந்த தொடர் அமையும். இரு அணிகளுமே அதை மனதில் வைத்து வீரர்கள் தேர்வில் கூடுதல் கவனம் செலுத்தும் என்பதில் சந்தேகமில்லை. ஜோ ரூட் தலைமையில் டெஸ்ட் தொடரில் களமிறங்கிய இங்கிலாந்து, டி20 தொடரில் இயான் மோர்கன் தலைமையில் விளையாடுகிறது. அந்த அணியில் மோர்கன், ஸ்டோக்ஸ், பட்லர், மாலன், ராய், மொயீன், சாம் கரன் ஆகியோர் அதிரடியாக விளையாடக் கூடியவர்கள் என்பதால், இந்திய பந்துவீச்சாளர்களுக்கு சரியான சவால் காத்திருக்கிறது. புவனேஷ்வர், சாஹல், வாஷிங்டன், அக்சர் களமிறங்குவது உறுதி என எதிர்பார்க்கப்படும் நிலையில்… தாகூர், தீபக் சாஹர், சைனி ஆகியோரில் இருந்து ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கலாம். ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவும் பிளேயிங் லெவனில் இடம் பிடிக்கலாம். ரோகித், தவான், கே.எல்.ராகுல், கோஹ்லி, பன்ட், ஹர்திக் என்று இந்திய அணியிலும் அதிரடிக்கு பஞ்சம் இல்லை. இரு அணிகளுமே தொடரை வெற்றியுடன் தொடங்கும் முனைப்புடன் உள்ளதால், ஆட்டத்தில் அனல் பறப்பது உறுதி.இந்தியா: விராத் கோஹ்லி (கேப்டன்), ரோகித் ஷர்மா (துணை கேப்டன்), கே.எல்.ராகுல், ஷிகர் தவான், ஷ்ரேயாஸ் அய்யர், சூரியகுமார் யாதவ், ரிஷப் பன்ட் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, யஜ்வேந்திர சாஹல், புவனேஷ்வர் குமார், அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர், நவ்தீப் சைனி, தீபக் சாஹர், ராகுல் திவாதியா, இஷான் கிஷண் (ரிசர்வ் கீப்பர்).இங்கிலாந்து: இயான் மோர்கன் (கேப்டன்), ஜோஸ் பட்லர், ஜேசன் ராய், லயம் லிவிங்ஸ்டோன், டேவிட் மாலன், பென் ஸ்டோஸ், மொயீன் அலி, அடில் ரஷித், ரீஸ் டாப்லி, கிறிஸ் ஜார்டன், மார்க் வுட், சாம் கரன், டாம் கரன், சாம் பில்லிங்ஸ், ஜானி பேர்ஸ்டோ, ஜோப்ரா ஆர்ச்சர்….

The post முதல் டி20 போட்டியில் இந்தியா – இங்கிலாந்து இன்று பலப்பரீட்சை: மோடி ஸ்டேடியத்தில் இரவு 7.00க்கு தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : India ,England ,T20 ,Modi Stadium ,Ahmedabad ,Modi Stadium, Ahmedabad ,Dinakaran ,
× RELATED எல்லா போட்டியும் முக்கியம்… – இந்திய...