×

முதல் இன்னிங்சில் தென் ஆப்ரிக்கா முன்னிலை

ஜோகன்னஸ்பர்க்: இலங்கை அணியுடனான 2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில், தென் ஆப்ரிக்கா 145 ரன் முன்னிலை பெற்றது. தி வாண்டரர்ஸ் ஸ்டேடியத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த இலங்கை அணி 157 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. குசால் பெரேரா 60 ரன், வனிந்து டி சில்வா 29, துஷ்மந்த சமீரா 22, திரிமன்னே 17 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். தென் ஆப்ரிக்க பந்துவீச்சில் அன்ரிச் நோர்ட்ஜ் 6 விக்கெட், முல்டர் 3, சிபம்லா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, முதல் இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்ரிக்கா முதல் நாள் ஆட்ட முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 148 ரன் எடுத்திருந்தது. டீன் எல்கர் 92 ரன், வாண்டெர் டுஸன் 40 ரன்னுடன் நேற்று 2ம் நாள் ஆட்டத்தை தொடங்கினர். எல்கர் 127 ரன் (163 பந்து, 22 பவுண்டரி), வாண்டெர் டுஸன் 67 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர். அடுத்து வந்த வீரர்களில் பவுமா 19, கேப்டன் டி காக் 10, நோர்ட்ஜ் 13 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் அணிவகுத்தனர். தென் ஆப்ரிக்கா முதல் இன்னிங்சில் 302 ரன் குவித்து ஆல் அவுட்டானது (75.4 ஓவர்). லுங்கி என்ஜிடி 14 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இலங்கை பந்துவீச்சில் விஷ்வா பெர்னாண்டோ 5, அசிதா, ஷனகா தலா 2, சமீரா 1 விக்கெட் வீழ்த்தினர். இலங்கை அணி 145 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கி விளையாடி வருகிறது. …

The post முதல் இன்னிங்சில் தென் ஆப்ரிக்கா முன்னிலை appeared first on Dinakaran.

Tags : South Africa ,Johannesburg ,Sri Lanka ,Dinakaran ,
× RELATED பெண்கள் டி20 போட்டி: தென்ஆப்பிரிக்காவை பாகிஸ்தான் வீழ்த்தியது