×

முதல் அரையாண்டுக்கான சொத்து வரி 30ம் தேதிக்குள் செலுத்தினால் 5% தொகை தள்ளுபடி: பெரம்பலூர் நகராட்சி ஆணையர் அறிவிப்பு

 

பெரம்பலூர்,ஏப்.22: 2023-2024ம் ஆண்டின் முதல் அரையாண்டுக்கான சொ த்துவரியை வருகிற30ம் தேதிக்குள் செலுத்தினால் 5சதவீதத் தொகை தள்ளு படி செய்யப்படும் என பெரம்பலூர் நகராட்சி ஆணையர் (பொ) ராதா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது : தமிழ்நாடு நகர்ப்புற உள் ளாட்சிகள் சட்டம் 1998 பிரி வு 84(1)-ன் படி பெரம்பலூர் நகராட்சி எல்லைக்கு உட்பட்ட சொத்து உரிமையாளர்கள், தங்களது 2023- 2024ம் ஆண்டின் முதல் அரை யாண்டுக்கான சொத்து வரியினை வருகிற 30-ஆம் தேதிக்குள் செலுத்தினால் 5 சதவீதத் தொகை தள்ளுபடி செய்யப்படும் என்பதை தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சொத்து வரித் தொகையினை செலுத்திய உடன் தங் களுக்கு குறுந்தகவல் அனுப்பப்படும். வரிதொகையை செலுத்துவதற்கு ஏதுவாக, நகராட்சி கணினி வசூல் மையங்கள், கடன் மற்றும் பற்று அட்டைகள், காசோலை, வரைவோலைகள் மற் றும் டிஜிட்டல் பணப் பரிவர் த்தனை வாயிலாக செலுத் துவதற்கு வசதிகள் ஏற்படு த்தப்பட்டுள்ளது என்பதை சொத்துவரி உரிமையாளர் களுக்கு தெரிவித்துக் கொ ள்கிறோம் எனக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

The post முதல் அரையாண்டுக்கான சொத்து வரி 30ம் தேதிக்குள் செலுத்தினால் 5% தொகை தள்ளுபடி: பெரம்பலூர் நகராட்சி ஆணையர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Perambalur Municipal Commissioner ,Perambalur ,Perambalur Municipal ,Dinakaran ,
× RELATED குழந்தை திருமணம் செய்து வைத்தால்...