×

முதல்வர் மருந்தகம் அமைக்க விண்ணப்பிக்கும் தேதி டிச.5 வரை நீட்டிப்பு

ராமநாதபுரம், நவ. 30: தமிழகத்தில் முதல்வர் மருந்தகம் அமைக்க விண்ணப்பிக்கும் தேதி டிச.5 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. கடந்த சுதந்திர தின விழாவில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக மக்களின் நலன் கருதி பொதுப்பெயர் (ஜெனரிக்) மருந்துகள் உள்ளிட்ட அனைத்து வகை மருந்துகளும் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் கிடைக்க செய்யும் வகையில், முதற்கட்டடமாக 1000 முதல்வர் மருந்தகங்கள் துவங்கப்படும் என அறிவித்தார். இந்த மருந்தகங்கள் அமைக்க விருப்பமுள்ள பி.பார்ம் மற்றும் டி.பார்ம் சான்று பெற்றவர்கள் மற்றும் அவர்களின் ஒப்புதல் பெற்று முதல்வர் மருந்தகம் அமைக்க விரும்புவோர் www.mudhalvarmarundhagam.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பங்களை அனுப்புவதற்கான தேதி டிச.5 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, விருப்பமுள்ளவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம்.

The post முதல்வர் மருந்தகம் அமைக்க விண்ணப்பிக்கும் தேதி டிச.5 வரை நீட்டிப்பு appeared first on Dinakaran.

Tags : Ramanathapuram ,Tamil Nadu ,Chief Minister ,M.K.Stalin ,Independence Day ,
× RELATED எம்ஜிஆர் நினைவு நாள் அனுசரிப்பு