×

முதலாமாண்டு மாணவர்களுக்கு அறிமுக பயிற்சி வகுப்பு

குமாரபாளையம், ஜூலை 1: குமாரபாளையம் அரசு கலை அறிவியல் கல்லூரியில், முதலாமாண்டு மாணவ, மாணவிகளுக்கான புத்தொளி பயிற்சி வகுப்புகள் துவக்கியது. ஒரு வார காலம் நடைபெறும் இந்த பயிற்சி வகுப்புகளில், பாடம் தொடர்பான அரசின் கல்வி மேம்பாட்டு திட்டம், உதவித்தொகை, வேலை வாய்ப்புக்கான தகுதிகள், வாழ்க்கை மேம்பாடுஉள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இதன் துவக்க விழா, முதல்வர் சரவணாதேவி தலைமையில் நேற்று நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர் ரகுபதி வரவேற்றார். குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் தவமணி பங்கேற்று சிறப்புரையாற்றினார். மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மதிப்பு அளிக்கவேண்டும். மாணவர்கள் தாம் எதிர்காலத்தில் என்னவாக உருவாக வேண்டும் என்பதை தீர்மானித்து, அதற்கான இலக்கை அடைய உழைக்க வேண்டும் என கேட்டுக்ெகாண்டார். தமிழ்த்துறை தலைவர் முரளிதரன் வாழ்த்துரையாற்றினார். மாணவர் பேரவை துணை தலைவர் கார்த்திகேயனி நன்றி கூறினார்.

The post முதலாமாண்டு மாணவர்களுக்கு அறிமுக பயிற்சி வகுப்பு appeared first on Dinakaran.

Tags : Kumarapalayam ,Government Arts and Science College ,
× RELATED விவசாயிகளுக்கு நவீன தொழில்நுட்ப பயிற்சி