×

முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி

 

செங்கல்பட்டு, ஜூலை 25: செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் சினேகா விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் 2025-2026ம் ஆண்டு நடத்தப்பட உள்ளது. இந்த முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப்போட்டிகள் பல்வேறு புதிய விளையாட்டு போட்டிகள் சேர்க்கப்பட்டு பள்ளி, கல்லூரி (மாணவ, மாணவிகள்) மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள், என 5 பிரிவிகளில் விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளது.

மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்க கலந்து கொள்வதற்கான விவரத்தை https://cmtrophy.sdat.in அல்லது https://sdat.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்ய வேண்டும். ஆகஸ்ட் 16 ம் தேதி கடைசி நாளகும். மேலும் விவரங்களுக்கு செங்கல்பட்டு மாவட்ட விளையாட்டு அலுவலகத்தோ அல்லது 74017 03461 என்ற தொலைப்பேசி எண்மில் தொடர்பு கொண்டு விவரங்கள் அறியலாம்.

The post முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி appeared first on Dinakaran.

Tags : Chief Minister's Cup Sports Competition ,Chengalpattu ,District Collector ,Sneha ,Chief Minister's Cup ,Tamil Nadu Sports Development Authority ,Dinakaran ,
× RELATED வடகிழக்கு பருவமழை காரணமாக...