×

மீன் விற்பனை அங்காடி அமைக்க விண்ணப்பம்

 

சிவகங்கை, அக்.6: மீன் விற்பனை அங்காடி, அலங்கார மீன் வளர்ப்பு நிலையம் அமைப்பதற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கலெக்டர் ஆஷாஅஜித் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டுத் திட்டம் 2021-2022ன் கீழ் சிவகங்கை மாவட்டத்தில் மீன் விற்பனை அங்காடி, அலங்கார மீன் வளர்ப்பு நிலையம் அமைத்தல் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்.

மகளிர் பிரிவினருக்கு திட்ட மதிப்பீடு ரூ.10லட்சம், 60சதவீத மானியத்திலும், பொது பிரிவினருக்கு சிறிய அளவிலான பயோபிளாக் குளங்களில் மீன் வளர்ப்பு செய்தல் திட்ட மதிப்பீடு ரூ.7.50லட்சத்தில் 40சதவீத மானியத்திலும், மகளிர்பிரிவு மற்றும் எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு 60சதவீத மானியத்திலும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மூலம் செயல்படுத்தப்படவுள்ளது.

இத்திட்டத்தில், பயன்பெற விரும்புவோர் சிவகங்கை மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்ப படிவம் பெற்று விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு மேற்கண்ட அலுவலகத்தையும் மற்றும் 93848 24553, 93848 24273 என்ற எண்களிலும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post மீன் விற்பனை அங்காடி அமைக்க விண்ணப்பம் appeared first on Dinakaran.

Tags : Sivagangai ,Dinakaran ,
× RELATED திருப்புவனம் பகுதிக்கு நிலையான...