×

மீஞ்சூரில் ரூ.3 கோடியில் உள்விளையாட்டு அரங்கம் கட்ட இடம் தேர்வு

 

பொன்னேரி, ஜூன் 25: பொன்னேரி தொகுதிக்கு உட்பட்ட மீஞ்சூர் சிறப்பு நிலை பேரூராட்சியில் உள்ள 18 வார்டு கவுன்சிலர்களின் கோரிக்கையை ஏற்று மீஞ்சூர் சிறப்பு நிலை பேரூராட்சி 15வது வார்டு பகுதியில் உள்ள அரசு இடத்தில் விளையாட்டு மேம்பாட்டு திட்டத்தின் சார்பில் ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள் விளையாட்டு அரங்கம் கட்டப்பட உள்ளது. இந்தநிலையில் நேற்று துரை சந்திரசேகர் எம்எல்ஏ நேரில் சென்று அந்த இடத்தை ஆய்வு செய்தார்.

அப்போது மீஞ்சூர் சிறப்பு நிலை பேரூராட்சி செயல் அலுவலர் மகேஸ்வரி, மீஞ்சூர் பேரூராட்சி மன்ற தலைவர் ருக்மணி மோகன்ராஜ், துணைத்தலைவர் அலெக்சாண்டர், மீஞ்சூர் நகர திமுக செயலாளர் தமிழ் உதயன், வருவாய் ஆய்வாளர் புருஷோத்தமன், கிராம நிர்வாக அலுவலர் பாஸ்கர், மீஞ்சூர் பேரூராட்சி கவுன்சிலர்கள் பரிமளா அருண்குமார், குமாரி புகழேந்தி, கவிதா சங்கர், சங்கீதா சேகர், மோனிகா ராஜேஷ் , வியாபாரிகள் சங்கத் தலைவர் ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

The post மீஞ்சூரில் ரூ.3 கோடியில் உள்விளையாட்டு அரங்கம் கட்ட இடம் தேர்வு appeared first on Dinakaran.

Tags : Minjur ,Ponneri ,Minjur Special ,Urban ,Panchayat ,Minjur Special Status Urban Panchayat ,Dinakaran ,
× RELATED மாவட்டம் முழுவதும் மழையால் சேதமான சாலைகள் சீரமைப்பு