×

மின்சாரம் தாக்கி விவசாயி சாவு

வல்லம், ஏப். 5:தஞ்சாவூர் அருகே களிமேடு பரிசுத்தம் நகர் பகுதியை சேர்ந்த விவசாயி தனது வயலுக்கு சென்றபோது அறுந்து கிடந்த மின் ஒயரை கவனக்குறைவாக தொட்டதால் மின்சாரம் தாக்கி இறந்த சம்பவம் சோக த்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை அருகே களிமேடு பரிசுத்தம் நகர் பகுதியை சேர்ந்தவர் இளங்கோ (56). இவர் நெல் கொள்முதல் நிலையத்தில் பணியாற்றி வந்தார். மேலும் தஞ்சை அருகே பல்லேரி பகுதியில் உள்ள தனது வயலில் கத்தரிக்காய் சாகுபடியும் மேற்கொண்டு இருந்தார். இளங்கோ பணி முடித்து தினமும் வயலுக்குச் சென்று கத்திரிக்காய் செடிகளுக்கு தண்ணீர் விடுவது உரம் தெளிப்பது போன்ற பணிகளை மேற்கொள்வது வழக்கம்.

அந்த வகையில் நேற்று முன்தினம் வயலுக்குச் சென்ற இளங்கோ அங்கு மின் கம்பி அறுந்து கிடப்பது தெரியாமல் அதன் மீது கையை வைத்து விட்டார். இதில் மின்சாரம் தாக்கி இளங்கோ சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார்.இதை பார்த்து அக்கம் பக்கத்தினர் கள்ளப் பெரம்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கள்ளப் பெரம்பூர் போலீசார் இளங்கோ உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து இளங்கோவின் மனைவி லலிதா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

The post மின்சாரம் தாக்கி விவசாயி சாவு appeared first on Dinakaran.

Tags : Vallam ,Kalimedu Parhamam Nagar ,Thanjavur ,Dinakaran ,
× RELATED சொட்டுநீர் பாசனத்தில் விளைந்த நிலக்கடலை அறுவடை மும்முரம்