×

மினி லாரி மோதி முதியவர் சாவு

 

கோவை, மே 10: கோவை காளப்பட்டி அருகே உள்ள கொங்கு நகரை சேர்ந்தவர் செந்தில் வேல்முருகன் (58). இவர், நேற்று முன்தினம் திருச்சி ரோட்டில் சிங்காநல்லூர் அருகே நடந்து சென்றார். அப்போது ஒண்டிப்புதூரில் உள்ள ஜவுளிக்கடை எதிரில் வந்த போது அந்த வழியாக வந்த மினி லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து அவர் மீது மோதியது.

இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அங்கு செந்தில் வேல்முருகன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கிழக்கு போக்குவரத்து பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மினி லாரி மோதி முதியவர் சாவு appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Senthil Velmurugan ,Kongu Nagar ,Kalapatti ,Trichy Road ,Singanallur ,Ondipudur… ,
× RELATED 25 ஆண்டுகளுக்கு கழித்து ரீ – ரிலீஸ்...