×

மாவட்டத்தில் விபத்து, அடிதடியில் 76 பேர் காயம்

தர்மபுரி, ஜன.19: தர்மபுரி மாவட்டத்தில் கரிநாளில் அடிதடி மற்றும் விபத்துகளில் 76 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பொங்கல் பண்டிகையின் கடைசி நாளான நேற்று முன்தினம், காணும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது. சுற்றுலாத்தளங்களில் மக்கள் குடும்பத்துடன் குவிந்து கொண்டாடி மகிழ்ந்தனர். மேலும் டாஸ்மாக் கடைகளிலும் விற்பனை களை கட்டியது. இந்நிலையில், தர்மபுரி மாவட்டத்தில் வாகன விபத்து, விளையாட்டு போட்டிகளில் வாக்குவாதம் ஏற்பட்டு அடிதடி என பல்வேறு சம்பவங்களில் 76 பேர் காயம் அடைந்து, தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் நடந்த தனித்தனி விபத்துகளில் 6 பேர் பலியாகினர். இந்த விபத்துக்கள் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post மாவட்டத்தில் விபத்து, அடிதடியில் 76 பேர் காயம் appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,Karinal ,Dharmapuri district ,Pongal festival ,Kanum Pongal festival ,Dinakaran ,
× RELATED செல்போன் திருடிய வாலிபர் கைது