×

மாலை நேர கல்லூரியில் மாணவர் சேர்க்கை துவங்க கோரிக்கை

தொண்டி:  தொண்டியில் ஆழகப்பா மாலை நேர கல்லூரியில் மாணவர் சேர்க்கை நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களின் கல்லூரி படிப்பு தடை பட்டுள்ளதால், மீண்டும் சேர்க்கையை துவங்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தொண்டியில் அழகப்பா பல்கலைகழகம் சார்பில் மாலை நேரக்கல்லூரி கடந்த 2005ம் ஆண்டு துவங்கப்பட்டது.தொண்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் மீனவர்கள், விவசாயில், சிறு வியாபாரிகள் என நடுத்தர வர்க்கத்தினரே அதிகம் வசிப்பதால் இந்த மாலை நேர கல்லூரி பெரும்பாலானோருக்கு கல்லூரி படிப்பை முடிக்க ஏதுவாக அமைந்தது. மேலும் வேலைக்கு செல்வோரும் படிக்க முடிந்தது. இந்நிலையில் கடந்த 2020-21ம் ஆண்டு முதல் மாணவர்கள் சேர்க்கையை நிறுத்தி வைத்துள்ளனர். இதனால் கடந்த வருடங்களில் பள்ளி படிப்பை முடித்தவர்கள் கல்லூரி படிப்பை தொடர முடியாமல் உள்ளனர். அதனால் மீண்டும் மாணவர் சேர்க்கையை துவங்க வலியுறுத்தி பொதுமக்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் சார்பில் தொண்டி பேரூராட்சி தலைவி ஷாஜகான் பானுவிடம் மனு கொடுத்தனர்.  இது குறித்து பெஸ்ட் ரவி கூறியது, கிராம பகுதி மாணவர்களின் கல்லூரி கனவை நிறைவு செய்யும் வகையில் மாலை நேர கல்லூரி இருந்தது. பெண்களும் கல்லூரி படிப்பை முடிக்க உதவியாக இருந்தது. ஆனால் தற்போது எவ்வித அறிவிப்பும் இல்லாமல் மாணவர் சேர்க்கை நிறுத்தப்பட்டுள்ளது. மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு மாணவர்கள் சேர்க்கையை துவங்க வேண்டும் என்றார்….

The post மாலை நேர கல்லூரியில் மாணவர் சேர்க்கை துவங்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Thondi ,Alagappa Evening College ,Dinakaran ,
× RELATED ஆவணம் இல்லாத வாகனத்தை பறிமுதல் செய்ய கோரிக்கை