×

மாற்று கட்சியினர் 50 பேர் அமமுகவில் இணைந்தனர்

திருத்தணி, மே 24: திருத்தணி நகர அமமுக பொறுப்பாளர் மு.சங்கர் ஏற்பாட்டில் மாற்று கட்சியினர் 50க்கும் மேற்பட்டோர் அக்கட்சியில் இணையும் விழா நேற்று நடந்தது. திருவள்ளூர் மேற்கு மாவட்ட அமமுக செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான தண்ணீர்குளம் ஏழுமலை முன்னிலையில், அனுமந்தாபுரம் பாக்யராஜ், ஆட்டோ சாமுவேல், இரட்டை கிணறு முருகன் மற்றும் பூசாரி வெங்கடேசன் உள்பட 50 பேர் அமமுகவில் இணைந்தனர். கட்சியில் இணைந்தவர்களுக்கு மாவட்ட செயலாளர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

The post மாற்று கட்சியினர் 50 பேர் அமமுகவில் இணைந்தனர் appeared first on Dinakaran.

Tags : AMMK ,Tirutani ,M. Shankar ,Thiruvallur West District ,MLA ,Thaneerkulam Ezhumalai ,Anumanthapuram Bhagyaraj ,
× RELATED மாவட்டம் முழுவதும் மழையால் சேதமான சாலைகள் சீரமைப்பு