×

மாற்றுத்திறனாளிகள் முற்றுகை போராட்டம்

பாலக்கோடு, நவ.22: தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில், பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு, மாற்றுத்திறனாளிகள் 100 நாள் வேலை கேட்டு போராட்டம் நடத்தினர். வட்ட துணை செயலளர் திம்மன் தலைமை வகித்தார். பாலக்கோடு திரெளபதி அம்மன் கோயில் முன்பிருந்து, மாற்றுதிறனாளிகள் ஊர்வலமாக சென்று, பிடிஓ அலுவலகம் முன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தின் கீழ், மாற்றுத்திறனாளிகளுக்கு, 100 நாள் வேலையை உறுதி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். இதையடுத்து, பாலக்கோடு டிஎஸ்பி மனோகரன், தாசில்தார் ரஜினி, இன்ஸ்பெக்டர் பாலசுந்தரம், பிடிஓ ரேணுகா ஆகியோர், சம்பவ இடத்திற்கு சென்று கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக கூறியதையடுத்து, போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

The post மாற்றுத்திறனாளிகள் முற்றுகை போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Palakodu ,Tamil Nadu Association for All Kinds of Disabled Persons and Defenders' Rights ,Palakodu District Development Office ,Deputy Secretary ,Thimman ,Palakode ,
× RELATED மக்கள் தொடர்பு திட்ட முகாம்