- குறைபாடுகள் உள்ளவர்களுக்கு சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையம்
- பவானி
- சுயம்வரம்-
- வேலைவாய்ப்பு
- குறைபாடுகள் உள்ளவர்களுக்கான பயிற்சி மையம்
- தின மலர்
பவானி, செப்.24: அம்மாபேட்டை அருகே பூதப்பாடியில் விடியல் மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற டிரஸ்ட் மூலம் மாற்றுத்திறனாளிகள் மற்றும் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள நலிவுற்றோருக்கான சுய தொழில் வேலை வாய்ப்பு பயிற்சி மற்றும் தையல் பயிற்சி மையம் திறப்பு விழா நடைபெற்றது. பூதப்பாடி ஒழுங்கு முறை விற்பனை கூட வணிக வளாக கட்டிடத்தில் இயங்கும் இந்த மையத்தை முன்னாள் எம்பி என்.ஆர்.கோவிந்தராஜர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
இதில் விடியல் டிரஸ்ட் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் ராஜா, பரமசிவம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் மற்றும் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள நலிவுற்றோருக்கு சுய தொழில் மற்றும் வேலை வாய்ப்பு அளிக்கும் பயிற்சிகள் வழங்கப்படுகிறது. மேலும், தையல் பயிற்சி அளித்து வருவாய் ஈட்டும் வகையில் வழிகாட்டுதல், ஊக்குவிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
The post மாற்றுத்திறனாளிகளுக்கான சுய தொழில் வேலை வாய்ப்பு பயிற்சி மையம் துவக்கம் appeared first on Dinakaran.