×

மாமல்லபுரத்தை கண்காணிக்க 5 டிரோன் கேமிராக்கள்: எஸ்.பி, தொடங்கி வைத்தார்

மாமல்லபுரம்: செஸ் ஒலிம்பியாட் எதிரொலியாக போட்டி நடைபெறும் ரிசார்ட், மாமல்லபுரத்தை கண்காணிக்க 5 டிரோன் கேமிராக்களை  செங்கல்பட்டு எஸ்.பி. தொடங்கி வைத்தார். மாமல்லபுரத்தில் சர்வதேச 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தனியார் நட்சத்திர ரிசார்ட்டில் வரும் 29ம் தேதி முதல் ஆகஸ்ட் 9ம் தேதி வரை நடைபெற உள்ளது. மேலும், பாதுகாப்பு பணிக்காக 4 போலீசார் ஈடுபட உள்ளனர்.இந்நிலையில், போட்டி நடைபெறும் தனியார் ரிசார்ட்டை கண்காணிக்க 2 டிரோன் கேமிரா, மாமல்லபுரம் சுற்றுலா தலம் மற்றும் போலீஸ் செல்ல முடியாத காட்டுப் பகுதியை கண்காணிக்க 3 டிரோன் கேமிரா என மொத்தம் 5 டிரோன் கேமிராக்கள் பறந்து பல்வேறு நிகழ்வுகளை வீடியோவாக பதிவு செய்யப்பட உள்ளது. இந்நிலையில், டிரோன் கேமிராக்களின் இயக்கங்களை செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி. சுகுணா சிங் நேற்று தொடங்கி வைத்தார். அப்போது, மாமல்லபுரம் டிஎஸ்பி ஜகதிஸ்வரன், இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்….

The post மாமல்லபுரத்தை கண்காணிக்க 5 டிரோன் கேமிராக்கள்: எஸ்.பி, தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : S.B. ,Mamallapuram ,chess olympiad ,Chengalpattu SB ,Dinakaran ,
× RELATED விஷச் சாராயம் பற்றி தகவல் தெரிவிக்க எண்கள் அறிவிப்பு..!!