×

மாமல்லபுரத்தில் சர்வதேச பட்டம் விடும் திருவிழா

சென்னை: தமிழகத்தில் முதன்முறையாக சுற்றுலாத்துறை சார்பில் நாளை முதல் 15ம் தேதி வரை மூன்று நாட்கள் சர்வதேச பட்டம் விடும் திருவிழா நடைபெறும் என்று சுற்றுலாத்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து, சுற்றுலாத்துறை வெளியிட்ட அறிக்கை:  சுற்றுலாத்துறை மூலம் செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் வரும் 13ம் தேதி (நாளை) சர்வதேச பட்டம் விடும் திருவிழாவை குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் த.மோ.அன்பரசன் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் தொடங்கி வைக்கின்றனர்.இந்த திருவிழா வரும் 13ம் தேதி முதல் 15ம் தேதி வரை மூன்று நாட்கள் நடக்கிறது. இதில் 10 குழுக்கள் கலந்துகொள்கின்றன. வெளிநாட்டிலிருந்து 4 குழுக்கள், இந்தியாவிலிருந்து 6 குழுக்கள் பங்கேற்கின்றன. பட்டம் விடும் திருவிழா மதியம் 12 மணிக்கு தொடங்கி  மாலை 6 மணி வரை நடைபெறும். திருவிழாவில் கலந்துகொள்ள சிறுவர்களுக்கு அனுமதி இலவசம். இந்நிகழ்ச்சிக்கு www.tnikf.com, http://www.tnikf.com ஆன்லைன் முகவரியில் முன்பதிவு செய்து நுழைவுசீட்டு பெற்றுக்கொள்ளலாம். …

The post மாமல்லபுரத்தில் சர்வதேச பட்டம் விடும் திருவிழா appeared first on Dinakaran.

Tags : International Graduation Festival ,Mamallapuram ,Chennai ,Tamil Nadu ,International Degree Festival ,
× RELATED மாமல்லபுரம் கடற்கரை கோயில்...