×

மானாமதுரை அருகே இலங்கை தமிழர்களுக்கு வீடு கட்டும் பணி துவக்கம்

மானாமதுரை, அக்.23: மானாமதுரை அருகே இலங்கை தமிழர்களுக்கு புதிதாக வீடு கட்டும் பணி தொடங்க இருப்பதால் அரசால் கட்டி கொடுக்கப்பட்ட பழைய வீடுகள் இடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு முழுவதும் இலங்கை தமிழர் முகாம்களில் ஊரக வளர்ச்சி துறை சார்பில் ரூ.5 லட்சத்தில் தனி வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டு வருகின்றன. சிவகங்கை அருகே ஒக்கூர் கிராமத்தில் புதிய வீடுகள் கட்டப்பட்டு அங்கு இலங்கை தமிழர் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் மானாமதுரை ஒன்றியத்திற்குட்பட்ட மாங்குளம் ஊராட்சியில் உள்ள மூங்கில் ஊரணி முகாமில் 188 இலங்கை தமிழர் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் குடியிருந்த பழைய வீடுகள் வசதி குறைவாகவும், விரிசல் அடைந்து அடிக்கடி அவர்கள் மராமத்து செய்யும் நிலையில் இருந்தது. இதையடுத்து அந்த வீடுகளை ஆய்வு செய்த ஊரக வளர்ச்சித் துறையினர் முதல் கட்டமாக 52 வீடுகள் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக பழைய வீடுகளை இடித்து விட்டு அதே இடத்தில் அனைத்து வசதிகளுடன் புதிய வீடு கட்டி தருவதற்கான ஏற்பாடுகளை ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் செய்து வருகின்றனர். இதையடுத்து அந்த வீடுகளில் இருந்தவர்கள் காலி செய்து தற்காலிகமாக வேறு வீடுகளுக்கு வாடகைக்கு குடி பெயர்ந்துள்ளனர். இதனால் கடந்த இரண்டு நாட்களாக வீடுகள் இடிக்கப்படுகிறது.

The post மானாமதுரை அருகே இலங்கை தமிழர்களுக்கு வீடு கட்டும் பணி துவக்கம் appeared first on Dinakaran.

Tags : Manamadurai ,
× RELATED மானாமதுரை எல்லைப்பிடாரி கோயில்...