×

மாநில ஜூனியர் கைப்பந்து போட்டிக்கு தர்மபுரி அணி தேர்வு

தர்மபுரி ஆக.3: தர்மபுரி மாவட்ட கைப்பந்து கழக மாவட்ட செயலாளர் தங்கராஜ் அறிக்கையில் கூறியிருப்பதாவது: சேலத்தில் வரும் 12ம் தேதி முதல் 15ம் தேதி வரை, மாநில அளவிலான ஜூனியர் கைப்பந்து போட்டி நடைபெறுகிறது. இதில் தர்மபுரியில் இருந்து பங்கேற்கும் வீரர்கள் தேர்வு முகாம், வரும் 6ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தர்மபுரி விளையாட்டு அரங்கத்தில் நடைபெறுகிறது. எனவே, மாவட்டத்தில் உள்ள 18 வயதிற்கு உட்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post மாநில ஜூனியர் கைப்பந்து போட்டிக்கு தர்மபுரி அணி தேர்வு appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,Dharmapuri District Volleyball Association District ,Thangaraj ,Salem ,Dinakaran ,
× RELATED செல்போன் திருடிய வாலிபர் கைது