×

மாநகராட்சி கிழக்கு மண்டல குறைதீர் முகாம்

 

மதுரை, அக். 11: மாநகராட்சி கிழக்கு மண்டல மக்கள் குறைதீர் முகாம் மதுரையில் நடந்தது. மதுரை ஆனையூரில் உள்ள மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் முகாம் நடைபெற்றது. மேயர் தலைமையில் கமிஷனர் முன்னிலையில் நடைபெற்றது. இந்த முகாமில் சொத்துவரி பெயர் மாற்றம், ஆக்கிரமிப்பு அகற்றுதல், குடிநீர் இணைப்பு, சாலை வசதி வேண்டி 5 மனு, பாதாளச்சாக்கடை இணைப்புக்கு 10 மனு, தெரு விளக்கு வசதி சுகாதாரம் தொடர்பாக 6 மனுக்கள் என மொத்தம் 37 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து நேரடியாக பெறப்பட்டது. கடந்த குறைதீர் முகாமில் பொதுமக்களிடம் இருந்து பெற்ற 20 மனுக்களுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு தீர்வு காணப்பட்டுள்ளது. மேலும் இந்த முகாமில் துணை மேயர், மண்டலத்தலைவர், துணை கமிஷனர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post மாநகராட்சி கிழக்கு மண்டல குறைதீர் முகாம் appeared first on Dinakaran.

Tags : East Zone Grievance Camp ,Madurai ,Eastern Zone People's Grievance Camp ,Municipal Corporation ,East ,Zone Kuratheer Camp ,Dinakaran ,
× RELATED மதுரை கோரிப்பாளையம் பகுதியில் சோதனை...