×

மாதா இருதய சபையில் நற்கருணை ஆராதனை

 

கிருஷ்ணகிரி, ஜூன் 24:கிருஷ்ணகிரி சாந்தி நகரில் அமைந்துள்ள மாதா இருதய சபை கன்னியர் மடத்தில், நற்கருணை ஆராதனை மற்றும் ஆசீர்வாத விழா நேற்று முன்தினம் இரவு நடந்தது. நிகழ்ச்சியில் நற்கருணை நாதரை அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஊர்வலமாக கொண்டு சென்று, புனித அன்னாள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இரண்டாவது மேடைக்கு கொண்டு வந்தனர்.
தொடர்ந்து, அங்கு நற்கருணை ஆராதனையும், ஆசீர்வாதமும் வழங்கப்பட்டன. தொடர்ந்து, கிருஷ்ணகிரி தூய பாத்திமா அன்னை திருத்தலத்தில், பங்கு தந்தை அருள்ராஜ் அடிகள், உலக நன்மைக்காகவும், சமாதானத்திற்காகவும், சிறப்புத் திருப்பலியும், நற்கருணை ஆராதனையும் செய்து, இறைமக்களுக்கு இறுதி ஆசீர்வாதத்தை வழங்கினார். இந்த ஆராதனையில், கிருஷ்ணகிரி மற்றும் சுற்றுப்புற பகுதியைச் சேர்ந்த ஏராளமான கிறிஸ்தவ மக்கள் கலந்து கொண்டனர்.

The post மாதா இருதய சபையில் நற்கருணை ஆராதனை appeared first on Dinakaran.

Tags : Mata Hridaya Sabha ,Krishnagiri ,Eucharistic Adoration ,Ceremony ,Mata Hridaya Sabha Nunnery ,Shanthi Nagar, Krishnagiri ,
× RELATED பட்டன் ரோஸ் சாகுபடி செய்ய விவசாயிகள் தீவிரம்