×

மாணவ, மாணவிகளுக்கு ஸ்மார்ட் வகுப்பால் கல்வியின் தரம் மேம்படுத்தப்படும்

நாகப்பட்டினம்,ஏப்.14: ஸ்மார்ட் வகுப்பால் கல்வியின் தரம் மேம்படுத்தப்படும் என கலெக்டர் அருண்தம்புராஜ் கூறினார். நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஊராட்சி ஒன்றியம் வடகரையில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளிக்கு ஸ்மார்ட் வகுப்பை கலெக்டர் அருண்தம்புராஜ் தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழ்நாடு முதல்வர் மாணவர்களின் கல்விக்கு முக்கியத்துவம் வழங்கும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
அதன்படி தமிழ்நாடு அரசு கல்வியில் பின்னடைவுக்கான காரணங்களை கருத்தில் கொண்டு அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் கல்வி மற்றும் கல்வி சார்ந்த இணை செயல்பாடுகளான கலை, அறிவியல், விளையாட்டு ஆகிய அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்க வாய்ப்பு வழங்கும் வகையில் உருவாக்கப்பட்ட சிறப்பு திட்டத்தின் மூலமும் கல்வியின் தரத்தை உயர்த்துவதே அரசின் நோக்கமாகும்.

அதன் அடிப்படையில் திருமருகல் ஊராட்சி ஒன்றியம் வடகரை ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தொடு திரை கணினி வகுப்பு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த வகுப்பினால் மாணவர்கள் கல்வி திறன் மேம்பாடு அதிகரிக்கும். கற்றலுக்கு எளிமையாக இருக்கும், மாணவர்கள் தங்களுக்கு தேவையான பாடம் குறித்த விளக்கத்தினை மிகவும் துல்லியமாக அறிந்து கொள்ள உதவும். உலகளவில் கல்வி குறித்த தகவல்களை தொடுதிரை மூலம் தெரிந்துக்கொள்ளலாம். இந்த வாய்ப்பை மாணவர்கள் பயன்படுத்தி திறனை வளத்து கொள்ள வேண்டும். ரூ.8.75 லட்சம் மதிப்பில் 7 தொடுதிரை கணினி வகுப்புகள் திறந்து வைக்கப்படுகின்றன. இந்த தொடுதிரையினால் தமிழ் மற்றும் ஆங்கிலம் வழி கல்வி பயிலும் 177 மாணவர்கள் பயன் பெறுவார்கள். இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் ஒன்றியக்குழு உறுப்பினர் சரவணன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் சரபோஜி, மாவட்ட கல்வி அலுவலர்(தொடக்கக்கல்வி) ஷெர்லின் விமல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

The post மாணவ, மாணவிகளுக்கு ஸ்மார்ட் வகுப்பால் கல்வியின் தரம் மேம்படுத்தப்படும் appeared first on Dinakaran.

Tags : Nagapattinam ,Collector ,Arunthambaraj ,Thirumarukal Panchayat Union ,Nagapattinam District ,
× RELATED நாகப்பட்டினம் மாவட்டத்தில் அக்னிவீர்...