×

மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள்

ராயக்கோட்டை, ஜூன் 3: ராயக்கோட்டையில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் மற்றும் நோட்டுப்பத்தகங்கள் வழங்கப்பட்டன. ராயக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், பாடப்புத்தகங்கள் மற்றும் நோட்டுப்புத்தகங்களை பள்ளியின் தலைமை ஆசிரியர் சீனிவாசன், உதவித் தலைமை ஆசிரியர்கள் மோகன், கலாவதி மற்றும் முதுகலை, பட்டதாரி ஆசிரியர்கள் வழங்கினர். கெலமங்கலம் ஒன்றியம், தொட்டிநாயக்கனஅள்ளி துவக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளி மாணவ- மாணவிகளுக்குவிலையில்லா பாடப்புத்தகங்கள், நோட்டுபுத்தகங்கள், சீருடைகள் வழங்கப்பட்டது. வட்டார கல்வி அலுவலர் மணிகிருஷ்ணன் 130 மாணவர்களுக்கு நோட்டுப்புத்தகங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் மனுநீதி மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், பள்ளி மேலாண்மைக்குழு தலைவர், பிடிஏ நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முன்னதாக புதிதாக சேர்ந்த 13 மாணவர்களுக்கு மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

The post மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் appeared first on Dinakaran.

Tags : Rayakottai ,Panchayat Union Primary School ,Government Girls Higher Secondary School ,Government Boys Higher Secondary School ,Rayakottai Government Boys Higher Secondary School ,
× RELATED பட்டன் ரோஸ் சாகுபடி செய்ய விவசாயிகள் தீவிரம்