×

மருத்துவத் துறையில் பணி நிரப்பும் போது கொரோனா காலத்தில் பணிபுரிந்தோருக்கு முன்னுரிமை அடிப்படையில் பணி: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: மருத்துவத்துறையில் பணி நிரப்பும் போது, கொரோனா காலக்கட்டத்தில் பணிபுரிந்தவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் பணி  வழங்கப்படும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். 12 முதல் 14 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு ‘கோர்பேவேக்ஸ்’ தடுப்பூசி செலுத்தும் பணி நேற்று முதல் தொடங்கியது. சென்னை அசோக்நகர் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் தொடங்கி வைத்தனர். பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, துணை மேயர் மு.மகேஷ்குமார், எம்.எல்.ஏ.க்கள் த.வேலு, ஜெ.கருணாநிதி, ஏ.எம்.வி.பிரபாகர் ராஜா, மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், துணை ஆணையர்கள் டாக்டர் எஸ்.மனிஷ், ஷேக் அப்துல் ரஹ்மான், மாமன்ற  உறுப்பினர்கள் சாந்தி, கே.ஏழுமலை ராஜா அன்பழகன், ப.சுப்பிரமணி, மாநகர நல  அலுவலர் டாக்டர் எம்.ஜெகதீசன், சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ்  உட்பட பலர் கலந்து கொண்டனர்.பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் 21 லட்சத்து 21 ஆயிரம் சிறுவர்களை இலக்கு வைத்து தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது. பூஸ்டர் தடுப்பூசியை பொருத்தவரை 4 லட்சத்து 3 ஆயிரத்து 652 பேருக்கு போடப்பட்டுள்ளது. இந்தநிலையில், 60 வயதை கடந்த இணை நோய் இல்லாதவர்களுக்கும்  பூஸ்டர் தடுப்பூசி போடும் பணியும் தொடங்கப்பட்டுள்ளது. சித்த மருத்துவ பல்கலைக்கழகம் தமிழகத்தில் உருவாவதற்கு கவர்னர் ஒப்புதல் தந்துள்ளார். கொரோனா தொற்று முழுமையாக குறைந்துள்ளதால், தற்காலிகமாக பணியமர்த்தப்பட்ட நர்சுகளுக்கு மார்ச் 31ம் தேதி வரை மட்டுமே பணி நீட்டிக்கப்பட்டிருந்தது. மருத்துவத்துறையில் உள்ள காலி பணியிடங்களை கண்டறிந்து, மார்ச் 31ம் தேதிக்கு பிறகு எம்.ஆர்.பி. மூலம் நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், கொரோனா காலக்கட்டத்தில் பணிபுரிந்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கி, எதிர்காலத்தில் மருத்துவத்துறையில் பணி நிரப்பும் போது, சான்றிதழ் வைத்திருப்பவர்களுக்கு சலுகை வழங்கி முன்னுரிமை அடிப்படையில் பணி வழங்கப்படும் என்று கூறினார்.பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நிருபர்களிடம் கூறியதாவது: அசோக் நகர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தடுப்பூசி செலுத்தும் முகாம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. 12 வயது முதல் 14 வயதுடைய சிறார்களுக்கும் தடுப்பூசி செலுத்துவதில் பள்ளிக் கல்வித்துறை முழு ஒத்துழைப்பை வழங்கி இலக்கினை விரைந்து எய்திட உறுதுணையாக இருக்கும். இவ்வாறு கூறினார். …

The post மருத்துவத் துறையில் பணி நிரப்பும் போது கொரோனா காலத்தில் பணிபுரிந்தோருக்கு முன்னுரிமை அடிப்படையில் பணி: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் appeared first on Dinakaran.

Tags : Corona ,Minister ,M. Subramanian ,Chennai ,M.Subramanian ,
× RELATED தமிழகத்தில் செயற்கை நுண்ணறிவு...