- மகளிர் ஒருங்கிணைப்புக் குழு
- திருப்பூர்
- உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழு
- திருப்பூர் மெயின் டெலிபோன் எக்ஸ்சேஞ்ச்
- மேற்கு வங்கம்
- பிஎஸ்என்எல்
திருப்பூர், ஆக.21: மேற்கு வங்க மாநிலம் மருத்துவக்கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதை கண்டித்து திருப்பூர் மெயின் தொலைபேசி நிலையத்தில் உழைக்கும் மகளிர் ஒருங்கிணைப்பு குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம், ஒப்பந்த ஊழியர் சங்கம், ஓய்வூதியர் சங்கம் ஆகிய சங்கங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாநில அமைப்பு செயலாளர் அண்ணாதுரை தலைமை வகித்தார். ஓய்வூதியர் சங்க மாநில அமைப்பு செயலாளர் முகமது ஜாபர், ஓய்வூதிய சங்கம் சுப்பிரமணியம், குமரவேல் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். உழைக்கும் மகளிர் ஒருங்கிணைப்பு குழு இணை கன்வீனர் லிடியா கிறிஸ்டி சமுதாயத்தில் பெண்களின் அவல நிலையை எடுத்துக் கூறினார். ஆர்ப்பாட்டத்தின் முடிவில் உயிரிழந்த மாணவிக்காக மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
The post மருத்துவக்கல்லூரி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்பு குழுவினர் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.