×

மயிலாடுதுறை மாவட்டத்தில் கஞ்சா விற்பனை முற்றிலும் ஒழிக்கப்படும்: டிஎஸ்பி சுந்தரேசன்

மயிலாடுதுறை,நவ.27: மயிலாடுதுறை மாவட்டத்தில் கஞ்சா மற்றும் சட்டவிரோத மது விற்பனை முற்றிலுமாக ஒழிக்கப்படும் என டிஎஸ்பி சுந்தரேசன் தெரிவித்துள்ளார். மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்கு டிஎஸ்பி சுந்தரேசன் மாவட்டத்தில் கஞ்சா, சட்டவிரோத மது மற்றும் சாராய விற்பனையை தடுக்க அவர் கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். ஒரேநாளில் சட்டவிரோத மது மற்றும் சாராய விற்பனையில் ஈடுபட்ட 11 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து கடத்தல் மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்நிலையில், மதுவிலக்கு ஆய்வாளர்கள் அன்னைஅபிராமி, ஜெயா, உதவி ஆய்வாளர் மகாலெட்சுமி ஆகியோர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

இதில், சட்டவிரோதமாக டாஸ்மாக் மதுபானங்களை விற்பனை செய்த இருவர் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 52 மதுபாட்டிகளை பறிமுதல் செய்து, கைது செய்து, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டனர். மேலும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட எழுமகளூர் கிராமத்தைச் சேர்ந்த மணிவண்ணன் (40), சீர்காழி தென்பாதியைச் சேர்ந்த மெய்யப்பன் (70) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த சோதனை தொடரும் எனவும், மயிலாடுதுறை மாவட்டத்தில் இதுபோன்ற குற்றச்சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் அதனை கைவிட்டு, திருந்தி வாழ வேண்டும் என்று டிஎஸ்பி சுந்தரேசன் அறிவுறுத்தியுள்ளார்.

The post மயிலாடுதுறை மாவட்டத்தில் கஞ்சா விற்பனை முற்றிலும் ஒழிக்கப்படும்: டிஎஸ்பி சுந்தரேசன் appeared first on Dinakaran.

Tags : Mayiladuthurai district ,DSP ,Sundaresan ,Mayiladuthurai ,Dinakaran ,
× RELATED சீர்காழியில் தாலுகா அலுவலகம் புதிதாக கட்ட வேண்டும்