×

மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகத்தில் இந்திய அரசமைப்பு முகப்புரை வாசிப்பு நிகழ்ச்சி

மயிலாடுதுறை,நவ.27: மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் இந்திய அரசமைப்பு முகப்புரை வாசிப்பு நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் மகாபாரதி தலைமையில் நடைபெற்றது. இந்திய அரசமைப்பு முகப்புரை வாசிப்பு நிகழ்வில் மாவட்ட கலெக்டர் வாசித்ததாவது: இந்திய மக்களாகிய நாம், இந்திய நாட்டினை இறையாண்மையும், சமநலச்சமுதாயமும், சமயச் சார்பின்மையும், மக்களாட்சி முறையும், அமைந்ததொரு குடியரசாக நிறுவவும், அதன் குடிமக்கள் அனைவரும் சமுதாய, பொருளியல், அரசியல் நீதி, எண்ணம். அதன் வெளியீடு. கோட்பாடு. சமயநம்பிக்கை, வழிபாடு இவற்றில் தன்னுaரிமை, சமுதாயப்படிநிலை.

வாய்ப்புநலம் இவற்றில் சமன்மை ஆகியவற்றை எய்திடச் செய்யவும், அவர்கள் அனைவரிடையேயும், தனி மனிதனின் மாண்பு, நாட்டு மக்களின் ஒற்றுமை, ஒருமைப்பாடு இவற்றை உறுதிப்படுத்தும், உடன் பிறப்புரிமையினை வளர்க்கவும், உள்ளார்ந்த உaறுதியுடையராய் நம்முடைய அரசமைப்புப் பேரவையில் 1949 நவம்பர் 26-ம் நாளாகிய இன்று ஈங்கதனால், இந்த அரசமைப்பினை ஏற்று, இயற்றி, நமக்கு நாமே வழங்கிக் கொள்கிறோம் என மாவட்ட கலெக்டர் வாசித்தார். இதில் டிஆர்ஓ உமாமகேஷ்வரி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பொது முத்துவடிவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகத்தில் இந்திய அரசமைப்பு முகப்புரை வாசிப்பு நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Mayiladuthurai Collector Office ,Mayiladuthurai ,District ,Collector ,Mahabharathi ,Mayiladuthurai District Collector ,District Collector ,India ,
× RELATED 13வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல் 90வயது முதியவர் போக்சோவில் கைது