அன்னூர், ஏப்.29: சேலம் மாவட்டம், குமாரசாமி பட்டியை சேர்ந்த தியாகராஜன் மகன் சபரிநாதன் (42), இவரது மனைவி தெய்வநாயகி. இவர்களுக்கு 6 வயதில் மகன் உள்ளார். இவர் காளபட்டியில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனத்தில் சிவில் இன்ஜினியராக பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் அலுவலகத்தின் முன்புறம் மது அருந்தி விட்டு காரில் உட்கார்ந்து தூங்கி உள்ளார். மாலையில் அருகில் இருந்தவர்கள் காரை திறந்து பார்த்த போது காருக்குள் இறந்து கிடந்தார். இதுகுறித்து கோவில்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post மது போதையில் காரில் தூங்கிய இன்ஜினியர் பலி appeared first on Dinakaran.
