×

மதுரையில் மீன் சின்னம் மீண்டும் நிறுவ கோரி ஆர்ப்பாட்டம்

 

மதுரை, ஜூன் 20: மதுரை அண்ணா பஸ் நிலையம் திருவள்ளூவர் சிலை அருகே தமிழர் கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில செயலாளர் தீரன் திருமுருகன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் மதுரையின் அடையாளமான பாண்டிய மன்னனின் மீன் சின்னம் ரயில் நிலைய முன்பகுதியில் நிறுவப்பட்டிருந்தது. இந்த சிலையை விரிவாக்க பணிக்காக ரயில்வே நிர்வாகம் அகற்றியது. அந்த மீன் சிலையை உடனடியாக நிறுவ வேண்டும் என கோரி கோஷமிட்டனர். இதில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். பின்பு கோரிக்கை தொடர்பான மனுவை கலெக்டர் சங்கீதாவிடம் கொடுத்தனர்.

The post மதுரையில் மீன் சின்னம் மீண்டும் நிறுவ கோரி ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Madurai ,Tamil Party ,Tiruvalluvar Statue ,Anna Bus Stand ,
× RELATED மதுரை கோரிப்பாளையம் பகுதியில் சோதனை...