×

வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 62 புள்ளிகள் உயர்வு

மும்பை: இன்று காலை வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 62 புள்ளிகள் உயர்ந்து காணப்பட்டது. கடந்த ஐந்து நாள் வர்த்தகத்தில் குறியீடு 921.37 புள்ளிகளாக உயர்ந்துள்ளதையடுத்து, இன்று மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 62.38 புள்ளிகள் உயர்ந்து 34,002.82 புள்ளிகளாக உள்ளது. ஐடி, டெக், நுகர்வோர் சாதனங்கள், ஆட்டோ மற்றும் மின்சாரம் போன்ற முன்னணி நிறுவன பங்குகள் விலை 1.08% வரை அதிகரித்திருந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 3.55 புள்ளிகள் அதிகரித்து 10,420.70 புள்ளிகளாக உள்ளது.  

டிசிஎஸ், இன்ஃபோசிஸ், டாடா மோட்டார்ஸ், ஓஎன்ஜிசி, விப்ரோ, எம் & எம், ஹீரோ மோட்டோ கார்ப் போன்ற நிறுவன பங்குகள் விலை 2.32% வரை அதிகரித்து காணப்பட்டது.

ஆசியாவின் இதர பங்குச்சந்தையான, ஹாங்காங்கின் ஹாங் செங் 0.07% உயர்ந்துள்ளபோது, சீனாவின் ஷாங்காய் கூட்டுக் குறியீடு 0.45% மற்றும் ஜப்பான் நாட்டின் நிக்கேய் 0.03% சரிந்து காணப்பட்டது. கடந்த வர்த்தகத்தில் அமெரிக்க டவ் ஜோன்ஸ் தொழிற்துறை சராசரியாக 0.90% வரை சரிந்து முடிந்தது.

Tags :
× RELATED அக்-05: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை!.