×

மகளிர் விடியல் பயண பஸ் தொடக்கம்

பரமத்திவேலூர், ஜூலை 6: நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பஸ் நிலையத்தில் இருந்து திருச்செங்கோடு வரை செல்லும் மகளிர் விடியல் பஸ் வழித்தடத்தை, அமைச்சர் மதிவேந்தன் தொடங்கி வைத்தார்.  பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று பரமத்திவேலூரில் இருந்து திருச்செங்கோடு வரை செல்லும் 7சி என்னும் புதிய பஸ் வழித்தடம் மற்றும் 9எ என்ற வழித்தட நீடிப்பு, மகளிர் விடியல் பயண பஸ் இயக்க தொடக்க விழா, பரமத்திவேலூர் பஸ் நிலையத்தில் நடந்தது. இந்நிகழ்ச்சியில், தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் பஸ் இயக்கத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதையடுத்து பஸ்சில் அமர்ந்திருந்த பயணிகளுக்கு இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் நாமக்கல் மாவட்ட கலெக்டர் துர்காமூர்த்தி, நாமக்கல் எம்பி மாதேஸ்வரன், மேற்கு மாவட்ட பொறுப்பாளர் கே.எஸ்.மூர்த்தி, பரமத்தி ஒன்றிய செயலாளர் தனராசு, வேலூர் நகர செயலாளர் முருகன், இளைஞர் அணி துணை அமைப்பாளர் நலடி ராஜா, விளையாட்டு மேம்பாட்டு அணி மகிழ் பிரபாகரன், அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் மோகன்குமார், கோட்ட மேலாளர் செங்கோட்டுவேலன், கிளை மேலாளர் பார்த்திபன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

The post மகளிர் விடியல் பயண பஸ் தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : Paramathivellur ,Minister ,Mathivendan ,Women's Dawn Bus ,Paramathivellur bus ,Namakkal district ,Thiruchengode ,Women ,Bus ,Thiruchengode… ,
× RELATED விவசாயிகளுக்கு நவீன தொழில்நுட்ப பயிற்சி