டெல்லி: அனைத்து வகை கிரிக்கெட் போட்டியிலிருந்தும் இந்திய வீரர் முகமது கைஃப் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 37 வயதாககும் இவர் 13 டெஸ்ட் மற்றும் 125 ஒருநாள் போட்டிகளில் இந்தியாவின் சார்பாக விளையாடியுள்ளார். இந்திய அணிக்காக 2000-06 ஆண்டுகளில் விளையாடியவர் முகமது கைஃப். சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஆகவும், சிறந்த ஃபீல்டராகவும் விளங்கினார். 2002-ம் ஆண்டு நடைபெற்ற நாட்வெஸ்ட் டிராபியில் இவரது பங்கு மிகவும் முக்கியமானது ஆகும்.
இந்த போட்டியில் 75 பந்துகளில் 87 ரன் எடுத்து அவுட் ஆகாமல் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தென் ஆப்பிரிக்கா அணியுடனான இறுதிப்போட்டியில் இந்திய அணியில் இருந்த வீரர்களில் கைஃப் ஒருவர் ஆவார். மேலும் உ.பி. அணிக்காக விளையாடி ரஞ்சி கோப்பையை வென்றுள்ளார். கங்குலி கேப்டனாக இருந்த போது யுவராஜ் சிங்குடன் சேர்ந்து, கைஃப் இந்திய ஃபீல்டிங்கில் முதுகெலும்பாக செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!
