×

போலீஸ் பயிற்சி பள்ளியில் டிஐஜி ஆய்வு

 

கோவை, ஏப். 28: சென்னை போலீஸ் தலைமை பயிற்சியக டிஐஜி ஆனி விஜயா நேற்று முன்தினம் கோவை வந்தார். 2 நாட்கள் கோவையில் தங்கிருந்து போலீஸ் பயிற்சி பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து பயிற்சியில் உள்ள இரண்டாம் நிலை பயிற்சி போலீசாருக்கான பயிற்சியை பார்வையிட்டார்.

அப்போது பயிற்சியை மேம்படுத்த அறிவுரை வாங்கினார். பின்னர் பயிற்சி போலீசாரை ஊக்குவிக்கும் விதமாக பேசி, சிறந்த பயிற்சி போலீசாருக்கு வெகுமதி வழங்கினார். முன்னதாக டிஐஜி ஆனி விஜயா போலீஸ் பயிற்சி பள்ளி வளாகத்தில் மரக்கன்று நட்டார். அவருடன் போலீஸ் பயிற்சி பள்ளி அதிகாரிகள் மற்றும் இரண்டாம் நிலை பயிற்சி போலீசார் குழு புகைப்படம் எடுத்து கொண்டனர்.

The post போலீஸ் பயிற்சி பள்ளியில் டிஐஜி ஆய்வு appeared first on Dinakaran.

Tags : DIG ,Police Training School ,Covey ,Chennai ,Chief Trainer ,Ani Vijaya ,Mundinam Goa ,Goa ,TIG ,
× RELATED 25 ஆண்டுகளுக்கு கழித்து ரீ – ரிலீஸ்...