×

போலி முகவரி பயன்படுத்தி 263 கோடி வணிகம் நடைபெற்றதாக கணக்கு காட்டிய ஏலக்காய் வியாபாரிகள் 13 கோடி வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிப்பு

* 3 வணிகர்களின் பதிவுஎண் ரத்து * வணிக வரித்துறை ஆணையர் அதிரடிசென்னை:இந்தாண்டு வணிகவரித்துறையில் ₹1 லட்சம் கோடியை எட்டுவதற்கான வேலைகளை துறை அமைச்சர் முடுக்கி விட்டுள்ளார். அதன்படி வணிகவரித்துறை ஆணையர் பணீந்திர ரெட்டியின் உத்தரவின் பேரில் மாநிலம் முழுவதும் வணிகவரித்துறை நுண்ணறிவு பிரிவு சார்பில் அவ்வபோது அதிரடி சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதில் வரி ஏய்ப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்களிடம் அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஏலக்காய் வணிகம் செய்யும் நிறுவனம் ₹13.16 கோடி வரி ஏய்ப்பு செய்து இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்து வணிகவரித்துறை ஆணையர் பணீந்திர ரெட்டி  வெளியிட்டுள்ள அறிக்கை:மதுரைக்கோட்ட வணிகவரி நுண்ணறிவுப் பிரிவால், தேனி மாவட்டம், போடிநாயக்கனூரில், ஏலக்காய் வணிகம் செய்யும் மூன்று வணிகர்களின் கணக்குகள் ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வின்போது இந்த வணிகர்களின் முகவரிகள் போலி என்பதும், இவர்கள் மூலம் ₹263.13 கோடி வணிகம் நடைபெற்றதாக சரக்கு மற்றும் சேவைவரிச் சட்டம் இணையதளத்தில் போலியாக கணக்குகள் காட்டப்பட்டது கண்டறியப்பட்டது. இவ்வணிகர்கள் போலி பில்கள் சமர்ப்பித்து ₹13.16 கோடி வரிஏய்ப்பு செய்தது கண்டறியப்பட்டது. அதன் அடிப்படையில் வணிகர்களின் பதிவு எண்கள் ரத்து செய்வதற்கு துரித நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஆய்வின்போது சேகரிக்கப்பட்ட விவரங்களைக் கொண்டு முன்மொழிவுகள் தயாரிக்கப்பட்டு, வரி வசூல் செய்ய சரக்கு மற்றும் சேவை வரிச்சட்டம் 2017ன் கீழ் நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….

The post போலி முகவரி பயன்படுத்தி 263 கோடி வணிகம் நடைபெற்றதாக கணக்கு காட்டிய ஏலக்காய் வியாபாரிகள் 13 கோடி வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிப்பு appeared first on Dinakaran.

Tags : cardamom ,Dinakaran ,
× RELATED கோதுமை நெய் ரொட்டி