பெரம்பூர், மே 31: புளியந்தோப்பு நேரு நகர், 4வது தெருவில் நேற்று முன்தினம் 2 பேரை சந்தேகத்தின் பேரில் போலீசார் பிடித்து விசாரணை செய்தனர். அவர்களிடம் 20 வலி நிவாரண ஊசி மற்றும் அதற்கு பயன்படுத்தப்படும் தண்ணீர், சிரஞ்சி உள்ளிட்டவை இருந்தன. விசாரணையில் இவர்கள், மாதவரம் பொன்னியம்மன்மேடு பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (27) மற்றும் எருக்கஞ்சேரி சங்கம் தெருவைச் சேர்ந்த வெங்கடேஷ் (37) என்பது தெரிய வந்தது.
இதில் கார்த்திக் என்பவர் பைக் மெக்கானிக்காக உள்ளார். வெங்கடேஷ் கொடுங்கையூரில் ஜிம் மாஸ்டராக உள்ளார். வெங்கடேஷ் ஜிம் மாஸ்டராக உள்ளதால், அடிக்கடி தனக்குத் தெரிந்த மெடிக்கல் ஷாப்பிற்குச் சென்று ரூ.400க்கு ஊசியை வாங்கி அதனை ரூ.600 வீதம், போதைக்காக விற்று வந்துள்ளார். மேலும் இவர்கள் இருவரும் செல்போனில் குறிப்பிட்ட செயலியை பதிவிறக்கம் செய்து, அதன் மூலம் இந்த ஊசியை இளைஞர்களுக்கு விற்பனை செய்து வந்துள்ளனர். இதனையடுத்து இருவரையும் கைது செய்தனர்.
The post போதை ஊசி விற்ற ஜிம் மாஸ்டர் கைது appeared first on Dinakaran.