×

போதிய இருக்கைகள் நிரம்பாததால் சிறப்பு ரயில்கள் ரத்து

சென்னை: தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: நிஜாமுதீன்-சென்னை சென்ட்ரல் இடையே இயக்கப்பட்ட (ரயில் எண்: 02434) ராஜ்தானி சிறப்பு ரயில் வரும் 12ம் தேதி முதல் மறு அறிவிப்பு வரும் வரை ரத்து செய்யப்படுகிறது. அதேபோன்று மறுமார்க்கமாக சென்னை சென்ட்ரல்-நிஜாமுதீன் இடையே இயக்கப்பட்ட (ரயில் எண் 02433) ராஜ்தானி சிறப்பு ரயில் வரும் 14ம் தேதி முதல் மறுஅறிவிப்பு வரும் வரை ரத்து செய்யப்படுகிறது. இதுபோல, பித்ரகுண்டா-சென்னை சென்ட்ரல் இடையே இயக்கப்பட்ட (ரயில் எண் 07237) மற்றும் சென்னை சென்ட்ரல்-பித்ரகுண்டா இடையே இயக்கப்பட்ட (ரயில் எண் 02738) சிறப்பு ரயில்கள் 7ம் தேதி (நேற்று) முதல் 31ம் தேதி வரை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….

The post போதிய இருக்கைகள் நிரம்பாததால் சிறப்பு ரயில்கள் ரத்து appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Southern Railway ,Rajdhani Special Train ,Nizamuddin ,Chennai Central… ,Dinakaran ,
× RELATED தாயின் மரணத்திற்கு முன்பே விவாகரத்து...