×

போச்சம்பள்ளி அருகே வேன் மோதி சர்வேயர் பலி

போச்சம்பள்ளி, மே 25: கிருஷ்ணகிரி மாவட்டம், பாரூர் அனுமன்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (32). நில அளவையாளரான இவர், நேற்று முன்தினம் இரவு போச்சம்பள்ளிக்கு டூவீலரில் வந்து கொண்டிருந்தார். பனங்காட்டூர் என்னுமிடத்தில் வந்த போது, தர்மபுரி நோக்கி சென்ற வேன் மோதியது. இதில், படுகாயமடைந்த ரமேஷ், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில், பாரூர் போலீசார் சடலத்ைத கைப்பற்றி போச்சம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post போச்சம்பள்ளி அருகே வேன் மோதி சர்வேயர் பலி appeared first on Dinakaran.

Tags : Pochampally ,Ramesh ,Barur Hanumanpallam ,Krishnagiri district ,Panangattur ,Dharmapuri.… ,Dinakaran ,
× RELATED பட்டன் ரோஸ் சாகுபடி செய்ய விவசாயிகள் தீவிரம்