×

போக்குவரத்து விதிமீறி மாணவர்களை ஏற்றி ெசன்றதாக சென்னையில் ஒரே நாளில் 1,866 வழக்குகள் பதிவு: போலீசார் நடவடிக்கை

சென்னை, ஜூன் 28: பள்ளிகள் அமைந்துள்ள பகுதிகளில் நடந்த சிறப்பு வாகன தணிக்கையின்போது, போக்குவரத்து விதிகளை மீறி மாணவர்களை அழைத்து வந்ததாக ஒரேநாளில் 1,866 வழக்குகள் பதிவு ெசய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர். சென்னை மாநகர காவல் எல்லையில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் என மொத்தம் 255க்கும் மேற்பட்ட பள்ளிகள் அமைந்துள்ளன. போக்குவரத்து விதிமுறைகள் குறித்து பள்ளி மாணவர்களிடையே, அவர்களின் பெற்றோரிடம் எடுத்து கூறி வலியுறுத்துமாறு போக்குவரத்து போலீசார் பள்ளிகளுக்கே நேரில் சென்று விழிப்புணர்வு நடத்தினர்.

அதைதொடர்ந்து சென்னை மாநகர காவல் எல்லையில் உள்ள பள்ளிகள் அருகே நேற்று முன்தினம் போக்குவரத்து போலீசார் சிறப்பு வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, பள்ளிகளுக்கு தங்களது குழந்தைகளை இருசக்கர வாகனங்களில் ஏற்றி வரும் பெற்றோர் முறையாக போக்குவரத்து விதிகளை பின்பற்றுகிறார்களா, ஆட்டோக்களில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களை மட்டும் ஏற்றுகின்றனரா, பள்ளி வாகனங்களில் அதிக மாணவர்களை அழைத்து வருகின்றனரா என்று தணிக்கை செய்யப்பட்டது.

அப்போது, பெரும்பாலான பள்ளி மாணவர்களின் பெற்றோர் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியதாகவும், ஆட்டோக்களில் அதிக எண்ணிக்கையில் மாணவர்களை ஏற்றி வந்ததாகவும், இரு சக்கர வாகனத்தில் 3 பேர் பயணம் செய்தது என மொத்தம் 1,866 வழக்குகள் பதிவு செய்து அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், போக்குவரத்து விதிகளை பின்பற்றாமல் வாகனங்களில் பள்ளி மாணவர்களை ஏற்றி செல்லும் பெற்றோர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், தனியார் வாகன உரிமையாளர்களுக்கு போக்குவரத்து விதிகளை மீறுவதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து சம்பவ இடத்திலேயே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

விதிமீறல் வழக்குபதிவு எண்ணிக்கை
ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியது 1,062
இருசக்கர வாகனத்தில்
3 பேர் பயணம் செய்தது 51
ஆட்டோவில் அதிகளவில்
பள்ளி மாணவர்கள் ஏற்றியது 29
அதிக எண்ணிக்கையில் தனியார்
வாகனங்களில் மாணவர்களை ஏற்றியது 724
மொத்தம் 1,866

The post போக்குவரத்து விதிமீறி மாணவர்களை ஏற்றி ெசன்றதாக சென்னையில் ஒரே நாளில் 1,866 வழக்குகள் பதிவு: போலீசார் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Chennai ,
× RELATED திருவல்லிக்கேணி பகுதிகளில் பைக்கில்...