×

போக்குவரத்து சிக்னலில் தீக்குளித்தவரால் பரபரப்பு

மதுரை, அக். 27: மதுரையில் வாகன போக்குவரத்து நிறைந்த சிக்னலில், நேற்று திடீரென தீக்குளித்தவரால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை, திடீர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் அழகப்பன்(55). இவர் நேற்று மாலை காளவாசல் பகுதியில் உள்ள சிக்னல் அருகே வந்தார். அப்போது அந்த பகுதியில் ஏராளமான வாகனங்கள் சாலையை கடக்கவும், பயணத்தை தொடரவும் காத்திருந்தன. இந்நிலையில், அவர் கையில் வைத்திருந்த பாட்டிலில் இருந்த மண்ணெண்ணையை எடுத்து திடீரென தனது உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதை பார்த்த அங்கு போக்குவரத்து பணியில் இருந்த காவலர் அனிதா உள்ளிட்ட போலீசார் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள், துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்து அழகப்பனை காப்பாற்றினர். இதைதொடர்ந்து அழகப்பன், மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். குடும்ப பிரச்னை காரணமாக அழகப்பன் தீக்குளிக்க முயன்றதாக தெரியவந்துள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post போக்குவரத்து சிக்னலில் தீக்குளித்தவரால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Madurai ,Dinakaran ,
× RELATED பாஜகவுக்கு கூட்டணி அமைக்காததால் தான்...