×

பொது நகைக்கடன் தள்ளுபடி : சிறப்பு தணிக்கை செய்ய மண்டல, மாவட்ட வாரியாக அதிகாரிகளை நியமித்தது தமிழக அரசு

சென்னை: பொது நகைக்கடன் தள்ளுபடி தொடர்பாக சிறப்பு தணிக்கை செய்ய மண்டல, மாவட்ட வாரியாக அதிகாரிகளை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. கூட்டுறவு நிறுவனங்களில் 40 கிராம் வரை பெறப்பட்ட நகைக்கடன்களை தள்ளுபடி செய்து தமிழ்நாடு அரசு ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டது. நகைக்கடன் தள்ளுபடி செய்ய அனுமதிக்கப்பட்ட அனைத்து நபர்களின் விவரங்களை தணிக்கை செய்ய தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. நகர கூட்டுறவு, மாவட்ட கூட்டுறவு, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெற்றவர்களின் விவரங்களை சிறப்பு தணிக்கை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசு, பல்வேறு கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில், 5 சவரன் வரை வழங்கிய நகை கடன்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இத்திட்டத்தின் கீழ் தகுதியான பயனாளிகளை தேர்வு செய்ய, பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.அதன் அடிப்படையில், 48 லட்சம் பேர் நகை கடன் வாங்கியதில், 13 லட்சம் பேருக்கு கடன் தள்ளுபடி கிடைத்துள்ளது. தள்ளுபடி பயனாளிகளின் பட்டியல் கூட்டுறவு வங்கிகள், சங்கங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. அந்த பட்டியலில் உள்ள நபர்களுக்கு மட்டும் நகைகளுடன் கடன் தள்ளுபடி சான்றும் வழங்கப்படும் என அதிகாரி கூறியிருந்தார். …

The post பொது நகைக்கடன் தள்ளுபடி : சிறப்பு தணிக்கை செய்ய மண்டல, மாவட்ட வாரியாக அதிகாரிகளை நியமித்தது தமிழக அரசு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu government ,Chennai ,
× RELATED மலேசியாவில் வெல்டர், கட்டிட பணிக்கு...