- விக்கிரவாண்டி
- புதுச்சேரி
- விக்கிரவாண்டி போலீஸ்
- இன்ஸ்பெக்டர்
- சத்தியசீலன்
- சப்-இன்ஸ்பெக்டர்
- மணிகண்டன்
- வீடூர் அணை ஆவின் காவல் நிலையம்
- தின மலர்
விக்கிரவாண்டி, ஜூன் 5: புதுச்சேரியிலிருந்து நுாதன முறையில் பாத்திரம், முடி வியாபாரம் செய்வதுபோல் பைக்கில் மதுபாட்டில்கள் கடத்திய இருவரை போலீசார் கைது செய்தனர். விக்கிரவாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சத்தியசீலன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் வீடூர் அணை ஆவின் பாலகம் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பைக்கில் பாத்திர வியாபாரம், முடி வாங்குவதுபோல வந்த இருவரை போலீசார் சந்தேகத்தின்பேரில் நிறுத்தி சோதனை செய்ததில் புதுச்சேரியிலிருந்து செஞ்சிக்கு மதுபாட்டில் கடத்தியதும், இருவரும் செஞ்சியை சேர்ந்த ரஜினி (35), வெங்கடேசன் (35) என தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிந்து அவர்களிடமிருந்து 100 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தனர்.
The post பைக்கில் மதுபாட்டில் கடத்திய 2 பேர் கைது appeared first on Dinakaran.
