×

பேரூர் செட்டிப்பாளையம் – மாதம்பட்டி நான்குவழி சாலை அமைக்க மரம் வெட்டும் பணிகள் தீவிரம்

 

தொண்டாமுத்தூர், ஜூலை 4: கோவை அருகே பேரூர் செட்டிப்பாளையம் முதல் மாதம்பட்டி வரை ரூ.38 கோடி மதிப்பீட்டில் நான்குவழி சாலை அமைக்கும் பணி துவங்கி உள்ளது. ரோட்டின் இருபுறமும் உள்ள மரங்கள் வேரோடு அகற்றப்பட்டு மாற்று இடங்களில் நடப்பட்டு வருகின்றன. 90 சதவீதம் மரங்கள் வெட்டப்பட்டுள்ளது. ரோடுகளை அகலப்படுத்த மண்களை தோண்டும் போது, குடிநீர் குழாய்கள் உடைந்து, மீண்டும் உடனடியாக போர்க்கால அடிப்படையில் பழுது பார்க்கப்பட்டு வருகிறது.
நூற்றாண்டுக்கு மேலாக உள்ள அரச மரங்கள் ஆலமரங்கள் வெட்டப்பட்டு வருகிறது. ரோடு உயரம் உயர்ந்து வருவதால், கடைகள், கீழ இறங்கி உள்ளன. பாலங்கள் அகலப்படுத்தப்பட்டு தடுப்பு சுவர்கள் கட்டப்பட்டு வருகின்றன. சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் உள்ளது. மேலும் வாகன ஓட்டிகளை பயமுறுத்தும் ராட்சத விளம்பர பலகைகள் அகற்றப்படாமல் உள்ளது. இதனால் இதுகுறித்து கோவை மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.

 

The post பேரூர் செட்டிப்பாளையம் – மாதம்பட்டி நான்குவழி சாலை அமைக்க மரம் வெட்டும் பணிகள் தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Perur Chettipalayam-Madampatti four-lane road ,Thondamuthur ,Perur Chettipalayam ,Madhampatti ,Coimbatore ,
× RELATED 25 ஆண்டுகளுக்கு கழித்து ரீ – ரிலீஸ்...