×

பேரூராட்சி செயல் அலுவலர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு

 

கோவை, ஜூன் 28: தமிழ்நாடு பேரூராட்சி செயல் அலுவலர்கள் சங்க பொறுப்பாளர்கள் தேர்தல் கடந்த மாதம் நடைபெற்றது. இதில் மாநில பொருளாளராக கிணத்துக்கடவு பேரூராட்சி செயல் அலுவலர் விஜயகுமார் தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து கோவை மாவட்ட செயல் அலுவலர்கள் சங்கத்தின் பொறுப்பாளர்கள் தேர்வு கூட்டம் நேற்று முன் தினம் நடைபெற்றது.
இதில் தலைவராக ஒத்தக்கால்மண்டபம் பேரூராட்சி செயல் அலுவலர் பார்த்திபன், துணை தலைவராக நெ.4 வீரபாண்டி பேரூராட்சி உமாராணி, செயலாளராக மோப்பிரிபாளையம் பேரூராட்சி பெலிக்ஸ், பொருளாளராக பூலுவபட்டி பேரூராட்சி சுந்தர்ராஜ், துணை செயலாளராக இடிகரை பேூருராட்சி ஜெகதீஷ், இணை செயலாளர்களாக கண்ணாம்பாளையம் பேரூராட்சி செயல் அலுவலர் சதீஷ்குமார், சூளேஸ்வரபட்டி பேரூராட்சி பூபதி, திருமலையம்பாளையம் பேரூராட்சி சுதா, மாநில செயற்குழு உறுப்பினராக சர்க்கார்சாமக்குளம் பேரூராட்சி செயல் அலுவலர் செந்தில் குமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

The post பேரூராட்சி செயல் அலுவலர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு appeared first on Dinakaran.

Tags : Town Panchayat Executive Officers Association ,Coimbatore ,Tamil Nadu Town Panchayat Executive Officers Association ,Kinathukadavu Town Panchayat ,Executive Officer ,Vijayakumar ,Coimbatore District Executive Officers Association… ,Dinakaran ,
× RELATED 25 ஆண்டுகளுக்கு கழித்து ரீ – ரிலீஸ்...