சென்னை: பேட்டரி கழிவுகளை மறுசீரமைப்போர் மற்றும் மறுசுழற்சி செய்வோர் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்திடம் மையப்படுத்தப்பட்ட நிகழ்நிலை இணைய முகப்பு வழியாக பதிவு செய்ய வேண்டும் என்று மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்ட அறிக்கை: சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகம், இந்திய அரசாங்கம் கடந்த மாதம் 22ம் தேதி பேட்டரி கழிவு மேலாண்மை விதிகள் 2022 பற்றிய அறிவிப்பை வெளியிட்டது. இதில் பயன்படுத்தப்பட்ட மற்றும் ஆயுட்காலம் முடிவடைந்த காரீய அமில பேட்டரிகள் மற்றும் தற்போதைய வரவான மின்னணு வாகன பேட்டரிகள் ஆகியவை அடங்கும். இந்த விதிகள் முக்கியமாக உற்பத்தியாளர், வியாபாரி, நுகர்வோர், பேட்டரி கழிவுகளை சேகரிப்போர், பிரித்தெடுப்போர், இடமாற்றம் செய்வோர், மறுசீரமைப்போர் மற்றும் மறுசுழற்சி செய்வோருக்கு பொருந்தும்.பேட்டரி கழிவுகளை மேலாண்மை விதிகள், 2022ன்படி பேட்டரி உற்பத்தியாளர்கள் மத்திய மாசு கட்டுப்பாடு வாரியத்திடம் மையப்படுத்தப்பட்ட நிகழ்நிலை இணைய முகப்பு வழியாக பதிவு செய்து நீட்டிக்கப்பட்ட உற்பத்தியாளர் பொறுப்பு சான்றிதழை பெற வேண்டும். இதேபோல் பேட்டரி கழிவுகளை மறுசீரமைப்போர் மற்றும் மறுசுழற்சி செய்வோர் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்திடம் மையப்படுத்தப்பட்ட நிகழ்நிலை இணைய முகப்பு வழியாக பதிவு செய்ய வேண்டும். மறுசுழற்சி செய்பவர் அல்லது புதுப்பிப்பவர் மூலம் கிடைக்கும் நீட்டிக்கப்பட்ட உற்பத்தியாளர் பொறுப்புச் சான்றிதழ் மூலம் உற்பத்தியாளர்கள் அவர்களின் விரிவாக்கப்பட்ட உற்பத்தியாளர் பொறுப்புக் கடமையை நிறைவேற்றுவார். மறுசுழற்சி செய்பவர்களிடமோ அல்லது புதுப்பித்தவர்களிடமோ நீட்டிக்கப்பட்ட உற்பத்தியாளர் பொறுப்புச் சான்றிதழ்கள் கிடைக்காத பட்சத்தில் தயாரிப்பாளரிடம் சேகரிப்புப் பொறுப்பும் இருக்கும். பொதுக்கழிவு மேலாண்மை அதிகாரிகள் சேகரிப்பட்ட கழிவு பேட்டரிகளை, உற்பத்தியாளர்கள் அல்லது அவர்கள் சார்பாக செயல்படும் நிறுவனங்கள் அல்லது மறுசுழற்சி அல்லது புதுப்பித்தலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். பேட்டரி கழிவு மேலாண்மை விதிகள், 2022ன்படி இந்த விதிகளுக்குட்பட்டு செயல்படாத உற்பத்தியாளர், மறுசீரமைப்போர் மற்றும் மறுசுழற்சி செய்வோர்களுக்கு சுற்றுச்சூழல் இழப்பீடு விதிக்க விதி வழிவகை செய்கிறது….
The post பேட்டரி கழிவு மறுசீரமைப்புக்கு இணைய முகப்பு வழியாக பதிவு: மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பு appeared first on Dinakaran.