×

பெரியகுளம் அருகே காட்டு மாடு தாக்கி விவசாயி படுகாயம்

பெரியகுளம், நவ.20: பெரியகுளம் அருகே, காட்டு மாடு தாக்கியதில் டூவீலரில் சென்ற விவசாயி பலத்த காயமடைந்தார். தேனி மாவட்டம், பெரியகுளம் கீழ வடகரையை சேர்ந்தவர் நாகேந்திரன் (50). விவசாயி. இவர் நேற்று காலையில் கும்பக்கரை பகுதியில் உள்ள தனது மாந்தோப்பிற்கு டூவீலரில் கிளம்பினார்.

கும்பக்கரை பிரதான சாலையில் சென்றபோது, அப்பகுதியில் உள்ள மாந்தோப்பில் இருந்து வெளியேறிய காட்டு மாடு ஒன்று திடீரென நாகேந்திரனை துரத்தி தாக்கியது. இதில் நிலைகுலைந்த நாகேந்திரன், டூவீலரிருந்து தவறி விழுந்து படுகாயமடைந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு, பெரியகுளம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். இது குறித்து தேவதானப்பட்டி வனச்சரக வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பெரியகுளம் அருகே காட்டு மாடு தாக்கி விவசாயி படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Periyakulam ,Nagendran ,Periyakulam Keewa Vadakarai, Theni District ,Kumbakarai ,Dinakaran ,
× RELATED பெரியகுளம் கண்மாய் கரையை மணல் மூடை அடுக்கி பலப்படுத்தும் பணி